பெங்களூரு சிட்டி மார்க்கெட் நகைக்கடையில் திருடிய 3 பேர் கைது

பெங்களூரு: பெங்களூரு சிட்டி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் பிரவீன். இவர் இதே பகுதியில் சொந்தமாக நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 29-ம் தேதி வியாபாரம் முடித்துக்கொண்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மாறுநாள் கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்த போது ரூ. 40 லட்சம் மதிப்பிலான 533 கிராம் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி நகைகள் திருடு போய் இருப்பது தெரியவந்தது.

இது குறித்து சிட்டி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் இன்ஸ்பெக்டர் குமாரசாமி தலைமையில் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பீகாராம்தேவசி, அமர்சிங், உத்தம்ரானா

ஆகியோர் திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டது தெரியவந்தது.  மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ரூ. 40.25 லட்சம் மதிப்பிலான 533 கிராம் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி நகைகள், ரூ.4 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: