சட்டவிரோதமாக வெடிமருந்துகள் எடுத்து சென்ற 3 பேர் கைது

மண்டியா: மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகாவை சுற்றியுள்ள பகுதியில் கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இந்த குவாரிகளுக்கு சிலர் சட்டவிரோதமாக வாகனத்தில் வெடிமருந்துகள் எடுத்து செல்வதாக கே.ஆர்.பேட்டை ஊரக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்த

போலீசார் அவ்வழியாக வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வெடிமருந்துகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தில் இருந்த மவுர்யா, நிஷாந்த், ஸ்ரீதர் ஆகிய மூன்று  கைது செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>