×

எழும்பூர் ரயில் நிலையத்தில் முதியவர் திடீர் தற்கொலை

சென்னை: எழும்பூர் ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர் அமைந்திருக்கும் கட்டிடத்தில் நேற்று ஒரு முதியவர் வேகமாக மாடிக்கு சென்று, தடுப்பு சுவர் மீது அமர்ந்து தரையை பார்த்தபடி இருந்தார். கீழே இருந்தவர்கள் இதை பார்த்து அவரை இறங்கி வரும்படி கூறியுள்ளனர்.  சிலர் ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதற்குள் அந்த முதியவர் கீழே குதித்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவம் நடந்து ஒரு மணி நேரம் ஆகியும் போலீசார் அங்கு வரவில்லை, ரயில்வே ஊழியர்களும் கண்டுகொள்ளவில்லை. தகவலறிந்து வந்த ஆர்பிஎப் போலீசார், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை செய்ததில் முதியவர் இறந்தது தெரிந்தது.

இதையடுத்து ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை செய்த முதியவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘‘முதியவர் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கும் போது ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அரை மணி நேரத்திற்கும் மேலாக யாரும் வரவில்லை. அதன்பிறகு அவர்கள் வருவதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார்,’’ என்றனர்.


Tags : suicide ,railway station ,Egmore , Elderly man commits suicide at Egmore railway station
× RELATED கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி