பொறியியல் கல்லூரிகள் பிப்ரவரி 18ல் தொடங்கும்: அண்ணா பல்கலை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்க அரசு படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து 20ம் தேதி மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரிகளை திறக்க அரசு முடிவு எடுத்தது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகம் கல்லூரிகள் திறக்கும் அட்டவணையை நேற்று வெளியிட்டது. இதன்படி, பொறியியல் 2 மற்றும் 3ம் ஆண்டு வகுப்புகள் பிப்ரவரி 18ம் தேதி தொடங்கும். மே மாதம் 21ம் தேதி இறுதி வேலை நாளாக இருக்கும்.

பின்னர் மே 24ம் தேதி செய்முறைத் தேர்வுகள் நடக்கும். பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 2ம் தேதி நடக்கும். அடுத்த ஆண்டுக்கான புதிய வகுப்புகள் ஜூலை 1ம் தேதி தொடங்கும். இதையடுத்து, இறுதியாண்டு முதுநிலை மற்றும் இளநிலை பொறியியல் மாணவர்களுக்கான இறுதி வேலை நாள் ஏப்ரல் 12ம் தேதியுடன் முடிவடையும். அவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 18ம் தேதியும் செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல் 26ம் தேதியும் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

Related Stories: