மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும்: வெங்கடேசன் எம்.பி தகவல்

சென்னை: மதுரை எம்.பி வெங்கடேசன் கூறியதாவது: மதுரை எய்ம்ஸ் திட்டத்திற்கான செலவு 2,000 கோடியாக அதிகரித்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது, இதற்கென தேவைப்படும் ‘‘நிர்வாக அனுமதியை உடனடியாக வழங்க வேண்டும். கடன் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை விரைவாக கையெழுத்திட்டு செயல்படுத்தி வேலைகளை துரிதப்படுத்துவது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக நிர்வாக இயக்குனர், மருத்துவ கண்காணிப்பாளர், துணை இயக்குனர் (நிர்வாகம்), மற்றும் நிர்வாக அலுவலர்களை உடனடியாக நியமித்து, இத்திட்டத்திற்கான நிர்வாக வேலைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும், ரூ.1200 கோடியிலிருந்து 2000 கோடியாக அதிகரிப்பதற்கான காரணம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் தொற்றுநோய்த் தடுப்பு மருத்துவமனை புதிதாக இணைப்பதால் திட்டமிடப்பட்ட செலவுத்தொகையில் பெரும் உயர்வு ஏற்பட்டுள்ளது. அதேபோல ஜப்பான் நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதில் இன்னும் ஏன் காலம் தாழ்த்தப்படுகிறது. அதற்கான தேதியை வரையறுங்கள் என்று கேட்டதற்கு, மார்ச் இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: