திருவள்ளூர், சென்னையில் நாளை மக்கள் கிராமசபை கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

சென்னை: திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார். 23ம் தேதி (நாளை) காலை-திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதி ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பம் ஊராட்சியில் நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டத்திலும், மாலையில் சென்னை தெற்கு மாவட்டம் மதுரவாயல் சட்டமன்ற தொகுதி வில்லிவாக்கம் ஒன்றியம் அடையாளம்பட்டு ஊராட்சியில் நடைபெறும் கூட்டத்திலும் கலந்து கொள்கிறார்.

Related Stories:

>