அதிமுக கூட்டணியில் பிரச்னை எதுவும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: குன்றத்தூர் ஒன்றியம் படப்பை பகுதியில் ரூ.90 கோடியில், தனிமைபடுத்துதல் அலகு, நிர்வாக கட்டித்துடன் கூடிய நீர்வாழ் உயிரினங்கள் நோயறிதல் ஆய்வகம் மற்றும் உணவகம் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. மத்திய கால்நடை வளர்ப்பு, பால் வளம் மற்றும் மீன் வள அமைச்சர் கிரிராஜ் சிங் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மீன்வளத்துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி: தமிழக மீனவர்கள், எல்லை தாண்டும் பட்சத்தில், இலங்கை அரசு உடனடியாக இந்திய கடலோர படையினர் மற்றும் இந்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும். கடலில் மாயமான 4 மீனவர்களில் 4 மீனவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டமானது. தற்போதைய கூட்டணி சுமூகமாக தொடர்ந்து வருகிறது. அதில் எந்த ஒரு பிரச்னையும் இல்லை. அதிமுகவில் இணைவதற்காக, புதிய கட்சிகள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>