எம்ஜிஆர் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமனம்: இபிஎஸ், ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர், துணை செயலாளர் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:அதிமுகவின் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் பொறுப்பில் பி.ஏ.ஆறுமுகநயினார் (தூத்துக்குடி மாவட்டம் அதிமுக முன்னாள் செயலாளர்), ஆர்.சீனிவாசன் (ஆற்காடு சட்டமன்ற தொகுதி, ராணிப்பேட்டை மாவட்டம்) ஆகியோரும், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் பொறுப்பில் எல்.கே.எம்.பி.வாசு (வேலூர் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். அதிமுகவினர் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.இவ்வாறு கூறி உள்ளனர்.

Related Stories:

>