50,000 புள்ளிகளை தொட்டது சென்செக்ஸ்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், முதல் முறையாக 50,000 புள்ளிகளைத் தொட்டுள்ளது.  பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மும்பை பங்குச்சந்தை நேற்று வரலாற்றுச் சாதனையாக 50,000 என்ற உச்சத்தை தாண்டி 50,149 புள்ளிகளை தொட்டது. ஆனால், வர்த்தக இறுதியில் முந்தைய நாளை விட 167 புள்ளிகள் சரிந்து 49,624 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை நிப்டி 54 புள்ளிகள் சரிந்து 14,590 புள்ளிகளாக இருந்தது.  அமெரிக்க அதிபராக ஜோபிடன் பதவியேற்பு, டிசிஎஸ், இன்போசிஸ், உள்ளிட்ட நிறுவனங்களின் வருவாய் அதிகரிப்பு, மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்புகள், வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பு போன்ற காரணங்களால் இது சாத்தியமானதாகவும், இன்னும் 10 ஆண்டுகளில் சென்செக்ஸ் ஒரு லட்சம் புள்ளிகளை எட்டலாம் எனவும் நிபுணர்கள் தெரிவித்தனர்.

Related Stories: