×

தேனி கலெக்டருக்கு கொரோனா

தேனி: தேனி மாவட்ட கலெக்டராக இருப்பவர் பல்லவி பல்தேவ். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 3 நாட்களாக அலுவலக பணிகளை மேற்கொள்ளாமல் இருந்தார். நேற்று முன்தினம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதன் முடிவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்குள்ள ‘சி’ பிளாக்கில் கொரோனா தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து பரிசோதனை செய்ய உள்ளனர்.Tags : Corona ,Theni Collector , Corona to Theni Collector
× RELATED தேனி கலெக்டர் பொறுப்பேற்பு