அமைச்சர் குறித்து அவதூறு திமுக நிர்வாகி கைது

பொள்ளாச்சி:  கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளராக இருப்பவர் நவநீதகிருஷ்ணன். சமூக வலைதளத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து அவதூறு பரப்பியதாக இவர் மீது பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த செல்வராஜ் புகார் அளித்தார். அதன்பேரில், நவநீதகிருஷ்ணனை மேற்கு போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொய்புகாரின்பேரில் திமுகவினர் ெதாடர்ந்து கைது செய்யப்படுவதாக மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>