பிரபல பெண் தாதா எழிலரசி புதுவை பாஜகவில் இணைந்தார்: வாட்ஸ்அப்பில் வைரலாகும் புகைப்படம்

புதுச்சேரி: புதுவை மாநிலம் காரைக்காலை சேர்ந்தவர் ராமு. சாராய வியாபாரியான இவருக்கு வினோதா, எழிலரசி என 2 மனைவிகள். முதல் மனைவியான வினோதாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் எழிலரசியுடன் வசித்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வினோதா, ராமுவை கொலை செய்தார்.  இதையடுத்து வினோதாவை கூலிப்படை வைத்து எழிலரசி கொலை செய்தார். அதோடு, ராமுவின் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறி முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி. சிவக்குமாரையும், ஐயப்பனையும் கூலிப்படையை ஏவி எழிலரசி கொலை செய்தார். இவ்வழக்கில் சரணடைந்த எழிலரசி, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்தநிலையில், ஜாமீனில் வெளியே வந்த எழிலரசி, சட்டமன்ற தேர்தலில் நிற்க போவதாக அறிவித்திருந்தார். இதை உறுதிபடுத்தும் விதமாக புதுச்சேரி பா.ஜ.க. தலைவர் சாமிநாதனை சந்தித்து மாலை அணிவித்து அசத்தியிருக்கிறார் எழிலரசி. ஏற்கனவே அரசியல் ஆர்வத்தில் இருந்து வரும் எழிலரசி பா.ஜ.க.வில் இணைந்து, தனது விருப்பத்தை அரங்கேற்றிவிட் டாரோ  என்று கேள்வி அரசியல் நோக்கர்களிடம் எழுந்துள்ளது.

Related Stories:

>