மூதாட்டியிடம் 5 சவரன் பறிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த சிறுவானூர் பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரின் மனைவி சுசீலா(64). இவர் நேற்றுமுன்தினம் மாலை தனது வீட்டுவாசலில் நின்றுகொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த நபர்கள் 2 பேர் திடீரென சுசீலா அருகே பைக்கை நிறுத்தினர். பின்னர் அவர்கள், சுசீலா அணிந்திருந்த ஐந்து சவரன் செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து சுசீலா கொடுத்துள்ள புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>