×

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! ரிக்டர் அளவில் 7-ஆக பதிவு: புவியியல் ஆய்வு மையம் தகவல்

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது ரிக்டர் அளவில் 7-ஆக பதிவாகியுள்ளது. பாண்டகிதனா பகுதியிலிருந்து தென்கிழக்கே 210 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் போன்டாகைடன் நகரில் இருநது தென்கிழக்கே 219 மீட்டர் தொலைவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.0ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 139 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. இந்த நடுநடுக்கம் பிலிப்பைன்ஸின் முக்கிய வணிக மையமான கருதப்படும் தவாயோ நகரில் உணரப்பட்டுள்ளதுது. இங்குள்ள வீடுகள் ஆட்டம் கண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணியளவில் உண்டான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக தகவல்கள் ஏதும் இல்லை.

Tags : earthquake ,Philippines , Powerful earthquake shakes Philippines Recorded as 7 on the Richter scale: Geological Survey Information
× RELATED டெல்லியில் சில பகுதிகளில் நிலநடுக்கம் என தகவல்