புனே: மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள சீரம் இந்தியா நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, இந்த 2 தடுப்பூசிகளும் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ம் தேதி தொடங்கியது. தடுப்பூசி போடும் பணி தொடங்கியிருப்பதால் மருந்து தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சீரம் நிறுவனத்தில் டெர்மினல் - 1ல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.