×

புனேவில் உள்ள கொரோனா தடுப்பூசி நிறுவனத்தில் தீ விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்..!

புனே: மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள சீரம் இந்தியா நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, இந்த 2 தடுப்பூசிகளும் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ம் தேதி தொடங்கியது. தடுப்பூசி போடும் பணி தொடங்கியிருப்பதால் மருந்து தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சீரம் நிறுவனத்தில் டெர்மினல் - 1ல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அலுவலகத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. தீ விபத்து பற்றி தகவல் அறுந்து சம்பவ இடத்திற்கு விரைத்த தீயணைப்புப்படை வீரர்கள் 10 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிகளவிலான புகையால் மீட்புப்பணிகளில் பல தடைகள் இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் இது கொரோனா வைரஸ் தடுப்பூசி உற்பத்தியை பாதிக்காது என்றும் நிறுவனத்தின் நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.

Tags : Pune ,Corona Vaccine Company , Fire at Corona Vaccine Company in Pune: Rescue efforts intensify ..!
× RELATED அரசு பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள்...