ஆன்லைன் கந்துவட்டி செயலி வழக்கு.: 2 சீனர்கள் உட்பட 4 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆன்லைன் கந்துவட்டி செயலி வழக்கில் கைதான 2 சீனர்கள் உட்பட 4 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவன இயக்குநர்கள் பிரமோதா, பவான், 2 சீனர்கள் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை தாம்பரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக கந்துவட்டிச் செயலியை இயக்கி வந்த  இரண்டு சீனர்கள் உள்ளிட்ட நான்கு பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு கடந்த 3-ம் தேதி பெங்களூரில் கைது செய்தது.

2 சீனர்கள், 2 பேர் கால் சென்டரில் பணிப்புரிந்தவர்கள். கைது செய்யப்பட்ட இரண்டு  சீனர்களிடமிருந்து இரண்டு மடிக்கணினிகள், ஆறு மொபைல் போன்கள், இரண்டு சீன பாஸ்போர்ட் மற்றும் ஏடிஎம் கார்டுகளை காவல்துறை பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் மீது இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம், தமிழ்நாடு கந்துவட்டி தடை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டு இருந்தார். அதனைத்தொடர்ந்து தற்போது தாம்பரம் நீதிமன்றம் விசாரணைக்கு வந்த இந்த மோசடி வழக்கில் கைதான 2 சீனர்கள் உட்பட 4 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து ஆணையிடப்பட்டுள்ளது. 

Related Stories:

>