×

சிட்னி டெஸ்ட் போட்டிக்கு பிறகு நீங்கள் மிகச் சிறப்பாக விளையாடினீர்கள் என வாழ்த்தினார் டிராவிட்: இளம் வீரர் விஹாரி பேட்டி



டெல்லி : இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களை வென்றது, மிக முக்கியமாக சிட்னியில் நடந்த 3 வது டெஸ்ட் போட்டியை டிரா செய்ய காயத்துடன் விளையாடிய விஹாரி மற்றும் அஸ்வின் முக்கிய காரணமாக இருந்தார்கள். இது குறித்து விஹாரி தனியார் செய்தி நிறுவனத்திற்கு கொடுத்த பேட்டியில் கூறியதாவது;  ராகுல் டிராவிட் ஒரு சிறந்த வாழிகாட்டி மற்றும் பயிற்சியாளர் என தெரிவித்தார்.

சிட்னி டெஸ்ட் போட்டிக்கு பிறகு ராகுல் டிராவிட் எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார். அதில் நீங்கள் மிக சிறப்பாக விளையாடினீர்கள், வாழ்த்துக்கள் என தெரிவித்திருந்தார். இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடினாள் அவர்களை உடனே வாழ்த்துவார் அதனால் தான் டிராவிட்-ஐ அனைவரும் மதிக்கிறார்கள்.   ராகுல் டிராவிட் என்ற ஒற்றை மனிதரால் தான் ரஞ்சி கோப்பைக்கும், இந்திய அணிக்குமான இடைவெளி குறைந்துள்ளது என தெரிவித்த விஹாரி, இளம் வீரர்கள் இந்தியா ஏ அணியில் தங்களின் திறமைகளை காண்பிக்க முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.

இந்தியா ஏ அணிக்கு தேர்தெடுக்கப்பட்ட நான், சிராஜ், சைனி , கில் ,மாயங்க் ,பிரிதிவி ஷா ஆகியோர் ஒன்றாக பல வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் விளையாடினோம். ராகுல் டிராவிட் இந்தியா ஏ அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கபட்ட பின் தான் பல வெளிநாட்டு பயணங்களுக்கு இந்தியா ஏ சென்று விளையாடியது. அதற்கு முன்பு இந்தியா ஏ அணி வெளிநாட்டு சென்று விளையாடியது குறைவு. இந்த காரணத்தினால் தான் ரஞ்சி கோப்பைக்கும், இந்திய அணிக்குமான இடைவெளி குறைந்து, நாங்கள் இந்திய அணிக்காக விளையாடிய  போது சிறப்பாக விளையாட முடிந்தது. இளம் வீரர்களாக எங்களை செதுக்கியதில் ராகுல் டிராவிட்க்கு மிக பெரிய பங்குண்டு.

எங்களை எங்கள் பாணியிலே விளையாட செய்து அதில் சில திருத்தங்களை மட்டும் சொல்லி எங்களின் நம்பிக்கையை உயர்த்தினார். நாங்கள் ராகுல் டிராவிட்ன்  பயிற்சியில் விளையாடிய போது எங்களுக்கு அவர் பயிற்சியாளர் என்பதை விட சிறந்த வழிகாட்டியாகவே திகழ்ந்தார். கடந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் நான் அறிமுக வீரராக களமிறங்கிய போது அவருடன் பேசினேன், நான் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளேன் என தெரிவித்தேன். அதற்கு டிராவிட் நீங்கள் நிறைய ரஞ்சி கோப்பை போட்டிகள் மற்றும் இந்தியா ஏ போட்டிகளில்  சிறப்பாக விளையாடினீர்கள், அதனால் இந்திய அணிக்கு ஆட தயாராகிவிட்டீர்கள், சிறப்பாக விளையாடுங்கள்  என தெரிவித்தார், இது போன்ற வார்த்தைகளால் நமக்கு டிராவிட் புது நம்பிக்கையை உருவாக்குவார் என புகழாரம் சூட்டியுள்ளார்.


Tags : Vihari ,Test match ,Sydney ,Dravid , Rahul Dravid, Vihari, AUSvIND, India A, Ranji Trophy, Dravid
× RELATED `அஸ்வின் அண்ணாவின் 100வது டெஸ்ட்...