வேலூர் அண்ணாசாலையில் எமதர்மன் வேடமிட்டு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

வேலூர்:   தமிழகத்தில் 32வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி வேலூர் மாவட்ட காவல்துறை சார்பிலும் தினந்தோறும் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வேலூர் கோட்டை எதிரே அண்ணாசாலையில் நேற்று மாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருணாநிதி, சக்திவேல், வடக்கு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். அப்போது, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எமதர்மன் ேவடமிட்ட நபரை வைத்து தலைக்கவசம் அணியாமலும், சீட் பெல்ட் போடாமலும் வரும் வாகன ஓட்டிகள் மீது எமன் பாசக்கயிறை வீசி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் சாலைவிதிகள் மதிக்கவில்லை என்றால் எமதர்மராஜா உயிரை பறித்துவிடுவார் என்ற கருத்தை விளக்கி விழிப்புணர்வு செய்யப்பட்டது. மேலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வாகன ஓட்டிகளிடம் வழங்கப்பட்டது.சோளிங்கர்: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத விழா முன்னிட்டு சோளிங்கரில் அண்ணா சிலை மற்றும் கருமாரியம்மன் கூட்ரோடு ஆகிய பகுதிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி எஸ்.ஐ மகாராஜன் தலைமையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் சாலைவிதிகளை மீறினால், எமதர்மராஜா உயிரை பறித்து விடுவார் என்ற கருத்தை  விளக்கும் விதமாக எமதர்மராஜன், சித்திரகுப்தன் வேடமணிந்த நாடக கலைஞர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவது, போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது உள்ளிட்ட காரணங்களால் தான் அதிக விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. சாலை விதிகளை மீறுபவர்கள் காவல் துறையை ஏமாற்றினாலும் எமதர்மனை ஏமாற்ற முடியாது என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Related Stories: