பயிர்களை சேதப்படுத்தும் படை குருவிகளை விரட்ட தானாக ஓசை எழுப்பும் கருவி

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே பயிர்களை சேதப்படுத்தும் படை குருவிகளை விரட்ட தானாக ஓசை எழுப்பும் கருவியை இளைஞர் தயாரித்துள்ளார். கோவில்பட்டி அருகே துரைச்சாமிபுரத்தில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் மானாவாரி பயிர்களான உளுந்து, பாசி, மக்காச்சோளம், கம்பு, வெங்காயம், மிளகாய் உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளன. மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான படை குருவிகள் இங்கு பயிரிடப்பட்டுள்ள வெள்ளை சோளம், கம்பு பயிர்களின் கதிர்களை தின்று நாசம் செய்கிறது. இதனை தவிர்க்க தகரம் தட்டியும், பட்டாசுகளை வெடித்தும் குருவிகளை விரட்டுகின்றனர்.

இந்நிலையில் துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்த விவசாயி மகன் அஜித்குமார் என்பவர் அரசின் இலவச பேன் இறக்கைகளைக் கொண்டு தானாக ஓசை எழுப்பும் கருவியை  வடிவமைத்துள்ளார். காற்று வீசும் போது பேனின் இறக்கைகள் சுழன்று சில்வர் தட்டில் அடித்து தானாக ஒலி எழுப்புகிறது. இந்த சத்தத்தைக் கேட்டு படை குருவிகள் அங்கு வருவதில்லை. இதனால் பயிர்கள் சேதமாவது தவிர்க்கப்படுவதாக அஜித்குமார் தெரிவித்தார்.

Related Stories: