பொன்மலை பணிமனையில் தயாரான புதிய வேகன்கள் அனுப்பி வைப்பு

திருச்சி: திருச்சி பொன்மலையில் தயாரான புதிய வேகன்களை பணிமனை மேலாளர் சியாமதர் ராம் கொடியசைத்து வேகன்களை அனுப்பி வைத்தார்.திருச்சி பொன்மலையில் 1926ல் தெற்கு ரயில்வேயின் பணிமனை ஆரம்பிக்கப்பட்டது. 1961ல் இருந்து இந்திய ரயில்வேக்கு சரக்கு சேவைக்கான வேகன்களை உற்பத்தி செய்யும் 4 பணிமனைகளில் பொன்மலை பணிமனையும் ஒன்றாகும். கடந்த 59 ஆண்டுகளில் 55 வகைகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சரக்கு பெட்டிகள் பொன்மலை பணிமனையில் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றில் 3 குறுகிய கேஜ், 7 மீட்டர் கேஜ் வகை பெட்டிகள் மற்றும் 45 பிராட் கேஜ் பெட்டிகளும் அடங்கும். மேலும் கன்கர் நிறுவனத்திற்காக கண்டெய்னர்களை ஏற்றி செல்லும் வேகன்களும் தயாரிக்கப்படுகிறது.

இந்திய ரயில்வேயின் ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் நியமங்கள் அமைப்பு வடிவமைக்கும் வேகன்களின் புதிய மாதிரிகள் பொன்மலையில் தயாரிக்கப்படுகிறது. தொடர்ந்து பொன்மலை பணிமனையில் 200வது பாக்ஸ்என்ெஹச்எல் வேகன் மற்றும் 275வது ஆர்எஸ்பி வேகன் ஆகியவற்றை தயாரித்து வழியனுப்பும் விழா நேற்று பொன்மலை பணிமனையில் நடந்தது. பணிமனை மேலாளர் சியாமதர் ராம் கொடியசைத்து வேகன்களை அனுப்பி வைத்தார். அப்போது உதவி தலைமை இயந்திரவியல் பொறியாளர் கிளமென்ட் பர்னபாஸ், வேகன் பிரிவு உதவி பணி மேலாளர் அடப்பலா சந்திரசேகர் மற்றும் ஊழியர்கள் இருந்தனர்.

மேலும் யுனெஸ்கோ புகழ் நீலகிரி மலை ரயில்வேக்கு 15 மீட்டர் கேஜ் வேகன்களை உற்பத்தி செய்வதற்கும் மற்றும் தெற்கு ரயில்வேக்கு டிராக் மெஷின்களை கொண்டு செல்லும் 48 மேம்படுத்தப்பட்ட பிடபிள்யுடி வேகன்களை உற்பத்தி செய்தற்கான புதிய ஆணைகள் பெறப்பட்டுள்ளது. மேலும் இரண்டடுக்கு கண்டெய்னர்களை 100 கிமீ வேகத்தில் ஏற்றி செல்லக்கூடிய கன்கர் நிறுவனத்திற்கான 1035 பிஎல்சிஎஸ் வகை வேகன்களை உற்பத்தி செய்யும் ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: