அடுத்த அதிரடி!: ஆந்திராவில் வீடுவீடாக சென்று ரேஷன் பொருள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி..!!

தெலுங்கானா: ஆந்திர மாநிலத்தில் வீடுவீடாக சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து சமூக நல திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார். முதியோர் உதவி தொகை, கல்வி கட்டணம் இலவசம், மதுவுக்கு தடை என பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். தொடர்ந்து, நவரத்ன திட்டங்கள் என்ற பெயரில் தேர்தல் வாக்குறுதிகளாக அளித்தவற்றை ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்.

அதன் ஒருத்திட்டமாக வீடுகள் தோறும் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் 50 வீடுகளுக்கு ஒரு நபர், சுய உதவி குழு பணியாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இத்திட்டத்தை காலை 10 மணியளவில் விஜயவாடாவில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கொடியசைத்து தொடக்கிவைத்தார். 830 கோடி ரூபாய் செலவில் ரேஷன் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக 9,260 வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

இந்தத் திட்டம் குறித்து பேசியுள்ள ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன், ரேஷன் பொருட்களைப் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த வயதான மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நிலையைக் கண்டு உருகிவிட்டதாக தெரிவித்துள்ளார். அவர்களின் நலனை கருத்தில் கொண்டே வீடுவீடாக சென்று ரேஷன் பொருள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

Related Stories:

>