இந்தியாவின் வெற்றி பிரமிக்கத்தக்கது: மைக்கேல் கிளார்க் பாராட்டு

சிட்னி: விராட் கோஹ்லி உள்பட 8 முன்னணி வீரர்கள் இல்லாமல் ஆடிய இந்தியாவிடம் டெஸ்ட் தொடரை 2-1 என ஆஸ்திரேலியா பறிகொடுத்தது பெரும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. இதுபற்றி ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், அளித்துள்ள பேட்டியில், கேப்டன் விராட் கோஹ்லி இல்லாத நிலையில், அந்த அணியின் முன்னணி வீரர்கள் 7 பேர் காயம் காரணமாக வெளியேறிய சூழலில் கத்துக்குட்டி வீரர்களுடன் களமிறங்கி டிம்பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியிருப்பது பிரம்மிக்கத்தக்க ஒன்றாகும். அசாதாரணமானது என்றால் கூட ஒரு குறையாகவே இருக்கும் அந்த வகையிலான ஒரு குணத்தை இந்திய அணி வெளிப்படுத்தியிருக்கிறது.

அடிலெய்ட்டில் 36 ரன்களில் சுருண்டு வரலாற்று தோல்வியை பதிவு செய்த போதும் தோல்வியில் இருந்து மீண்டு வந்து அடுத்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற விதமும் மிரட்சியானது. பலம் குன்றிய இந்திய அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா அணி எதிர்மறையுடன் இப்போட்டியில் விளையாடியது. இயல்பாக ஆக்ரோஷத்துடன் விளையாடாமல், முதல் பந்து முதலே தோல்வி பயத்துடன் விளையாடியது, என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>