×

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக 3 நாளில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் தகவல்

டெல்லி: பேரறிவாளன் விடுதலை தொடர்பாக 3 நாளில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா தகவல் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய 3 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு பரிந்துரைத்தது மீது ஆளுநர் முடிவெடுக்காமல் உள்ளார். இந்நிலையில், ஆளுநர் தாமதம் செய்வதால் உச்சநீதிமன்றமே தன்னை விடுவிக்க வேண்டும் என்று பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

ஆளுநருக்கு அதிகாரம் இல்லை, ஜனாதிபதிதான் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு வழக்கறிஞர் கே.எம்.நடராஜன் நேற்று வாதம் செய்தார். அரசியல் சட்டம் 161-வது பரிவின் படி மாநில அமைச்சரவை கூடி 7 பேரையும் விடுவிக்க 2018 செப்டம்பரில் முடிவெடுக்கப்பட்டது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் 7 பேரையும் விடுதலை செய்யலாம் என சட்ட நிபுணர்கள் கூறினர். 7 பேரையும் விடுவிப்பதில் ஆளுநருக்கு உடன்பாடு இல்லை எனில் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு கோப்புகளை திருப்பி அனுப்பலாம் என கூறியுள்ளது.

7 பேரை விடுவித்து கையெழத்திடுவாரா கோப்புகளை திருப்பி அனுப்புவாரா என்பது 4 நாளில் தெரியவரும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் பேரறிவாளன் விடுதலை பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று வரை விடுதலையை எதிர்த்தும் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறி வந்த மத்திய அரசின் நிலையில் திடிர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 7 பேரை விடுவிக்கும்அ அதிகாரம் ஆளுநருக்கே உள்ளது என்பதை மத்திய அரசு ஏற்றுள்ளதை துஷார் மேத்தாவின் தகவல் உறுதி செய்துள்ளது.

Tags : Governor ,release ,Tamil Nadu ,Perarivalan ,Central Government ,Attorney General ,Supreme Court , Perarivalan, release, in 3 days, the Governor of Tamil Nadu, will decide
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...