பேரறிவாளன் விடுதலை தொடர்பாக 3 நாளில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

டெல்லி: பேரறிவாளன் விடுதலை தொடர்பாக 3 நாளில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா தகவல் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய 3 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு பரிந்துரைத்தது மீது ஆளுநர் முடிவெடுக்காமல் உள்ளார். இந்நிலையில், ஆளுநர் தாமதம் செய்வதால் உச்சநீதிமன்றமே தன்னை விடுவிக்க வேண்டும் என்று பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>