×

இந்தியாவில் 2-ம் கட்டமாக தடுப்பூசி செலுத்தும் போது மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளதாக தகவல்?

டெல்லி: இந்தியாவில் 2-ம் கட்டமாக தடுப்பூசி செலுத்தும் போது பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 50 வயதிற்கு மேற்பட்ட எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மாநில முதல்வர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அனைத்து மாநிலங்களிலும் ஒத்திகை பணிகள் தற்போது நடைபெற்றது. பின்பு அனைத்து மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கடந்த வாரத்தில் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் திருச்சியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். மேலும் நாளை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தடுப்பூசி செலுத்த உள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை அரசு அறிவித்துள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் கோவிஷீல்ட், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளையும் எமர்ஜென்சிக்கு பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது.

Tags : Modi ,phase ,India , In India, the vaccine, Modi, corona vaccine
× RELATED நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த நடிகர் பிரகாஷ்ராஜ் அழைப்பு