சட்டவிரோத கட்டுமான வழக்கில் நடிகர் சோனு சூட் மனு தள்ளுபடி.: மும்பை ஐகோர்ட் உத்தரவு

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் மனுவை தள்ளுபடி செய்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சோனு சூட்டிற்கு சொந்தமான கட்டிடம் மும்பை ஜூகுவில் உள்ளது. அந்த கட்டிடத்தில், அவர் சட்டவிரோத கட்டுமான பணிகளை மேற்கொண்டு இருப்பதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மும்பை மாநகராட்சி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அந்த நோட்டீஸை எதிர்த்து அவர் மும்பை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்து இருந்தார். ஆனால் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இந்தநிலையில் சமீபத்தில் சோனு சூட் கட்டிடத்தில், மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் ஜூகு காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்தனர். அந்த புகாரில், சோனு சூட் உரிய அனுமதி பெறாமல் குடியிருப்பு கட்டிடத்தை ஓட்டலாக மாற்றியிருப்பதாக கூறப்பட்டு இருந்தது.

அதனையடுத்து நடிகர் சோனு சூட் தனக்கு எதிரான நோட்டீசை ரத்து செய்ய கோரியும், மாநகராட்சி நடவடிக்கை எடுக்காமல் இருக்க இடைக்கால தடைவிதிக்க வேண்டும் எனவும் மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சோனு சூட்யின் மனுவை  மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>