இலங்கை கடற்படையின் வெறிச் செயலால் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் சடலமாக மீட்பு: நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு சென்ற போது காணமல் போன 4 மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். கடந்த 18-ம் தேதி கோட்டைப்பட்டினத்தில் இருந்து ஒரே படகில் சென்ற 4 பேர் கரை திரும்பாத நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்த போது காணமல் போன 4 மீனவர்களும் சடலமாக மீட்கப்பட்டனர். 3 ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்த சாம்சன் சடலமாக மீட்கப்பட்டார். நேற்று செந்தில்குமார் உடலை மீட்ட நிலையில் மெசியா, நாகராஜ் உடலையும் இலங்கை கடற்படை மீட்டது.

கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களும் கடந்த 18-ம் தேதி காணாமல்போயினர். தமிழக மீனவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தி, படகை மூழ்கடித்ததாக குற்றம்சாட்டினர். இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் மீனவர்களின் படகு கவிழ்ந்ததாக சக மீனவர்கள் குற்றம் சாட்டினர். மூழ்கிய மீனவர்களை மீட்காமல் இலங்கை கடற்படை சென்தாகவும் தமிழக மீனவர்கள் குற்றம் சாட்டினர்.

கி.வீரமணி கேள்வி:

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்று பேச்சு நடத்தியதற்கு இது தான் காரணமா என கி.வீரமணி கேள்வி எழுப்பினார். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார். மீனவர்கள் மீது அக்கறை இல்லாத மத்திய, மாநில அரசுகளை கண்டிக்கிறேன் என மத்திய மீனவர் சங்கத் தலைவர் தேவதாஸ் கூறினார்.

இலங்கை அரசு விளக்கம்:

மோசமான வானிலை காரணமாக படகு கவிழ்ந்ததாக இலங்கை அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்கள் படகு கவிழ்ந்து விபத்து என இலங்கை கடற்படை விளக்கம் அளித்துள்ளது. தங்களது ரோந்து கப்பல் மீது தமிழக மீனவர்கள் படகு தோதி தப்பிச் சென்றதாக இலங்கை அரசு கூறியிருந்தது. தமிழக மீனவர்கள் தப்பிச் செல்லும் போது படகு கடலில் மூழ்கியதாக இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: