×

அமெரிக்காவில் ஜனநாயகம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது; அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகம் மற்றும் அமெரிக்காவை காக்க பாடுப்படப்போகிறேன்: ஜோ பைடன்

வாஷிங்டன்: புதிய வரலாறு படைப்போம் என அதிபர் ஜோ பைடன் முதல் உரையை தொடங்கினார். அரசியல் தீவிரவாதத்தை முறியடிக்க வேண்டும் என நாட்டு மக்களிடைகே பதவி ஏற்றப் பின் பேசினார். அமெரிக்க அதிபரின் அலுவலகமான ஓவல் அலுவலகத்தில் ஜோ பைடன் பணியை தொடங்கினார். அமெரிக்க பதவியேற்ற முதல்நாளில் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்க மீண்டும் இணைவதற்கான உத்தரவை ஜோ பைடன் பிறப்பித்தார்.

அமெரிக்காவில் இன சமத்துவத்தை உறுதி செய்யும் வகையிலான உத்தரவை பைடன் பிறப்பித்தார், அமெரிக்காவின் சர்வதேச கூட்டணிகளை சரிசெய்வோம் எனவும், அமைதி, பாதுகாப்பு, வளத்திற்கான நல்ல நண்பனாக அமெரிக்கா விளங்கும் என கூறினார். உள்நாட்டு பயங்கரவாதம், வெள்ளையினவாதம் உள்ளிட்டவற்றை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கூறினார். அமெரிக்காவில் ஜனநாயகம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது எனவும், அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகம் மற்றும் அமெரிக்காவை காக்க பாடுப்படப்போகிறேன் என உறுதியளித்தார்.


Tags : United States ,Joe Biden , Democracy in America, Victory, Joe Biden
× RELATED அமெரிக்க வாழ் இந்தியர்கள்...