×

நடுவானில் மூச்சு திணறல் 7 வயது உபி சிறுமி பலி

நாக்பூர்:  உபி மாநிலம் லக்னோவில் இருந்து மும்பைக்குச் நேற்று முன்தினம் சென்ற கோ ஏர் விமானத்தில், உபி.யைச் சேர்ந்த ஆயுஷி என்ற சிறுமி தனது தந்தையுடன் பயணித்தார். விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே ஆயுஷிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அவசரமாக நாக்பூரில் விமானம் தரையிறக்கப்பட்டது. அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் சிறுமியின் ஏற்கனவே உயிரிழந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர். இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், ‘‘ரத்தத்தில் ஒருவருக்கு சராசரியாக 12 கிராமுக்கும் அதிகமாக ஹிமோகுளோபின் இருக்க வேண்டும்.

10 கிராமுக்கும் குறைவாக ஹிமோகுளோபின் இருந்தால் அது ரத்த சோகையாக வரையறுக்கப்படுகிறது. இவர்களுக்கு விமான பயணத்தில் மூச்சுத்திணறல் ஏற்படலாம் என்பதால், விமான நிறுவனங்கள் பயணம் செய்ய அனுமதிக்காது. அதிலும், ஆயுஷிக்கு 2.5 கிராம் என்ற மிக மோசமான ஹிமோகுளோபின் குறைபாடு இருந்துள்ளது. அவரது உயிரிழப்புக்கு இதுவே காரணம்’’ என்றனர்.

Tags : suffocation , 7-year-old girl killed by suffocation in midair
× RELATED கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 2...