×

புதிய கொரோனா 60 நாட்டில் பரவியது

ஜெனீவா: இங்கிலாந்தில் பரவியுள்ள புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ், 60 நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்நாட்டில் இருந்து இந்தியா வந்த பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், 100-க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் அந்தந்த மாநிலங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் ஒரே அறையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் அவர்களுடன் ஒரே விமானத்தில் வந்தவர்கள் மற்றும் உறவினர்களுக்கு தொடர் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

உருமாறிய இந்த கொரோனாவால் ஏற்படும் சூழல்களை எதிர்கொள்ள மாநிலங்கள் தயாராக இருக்குமாறு மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் உலகின் 60 நாடுகளில்  உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் கூறுகையில், “பிரிட்டனில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் தற்போது 60 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டதால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும்என்றும் சமூக இடைவெளியை உலக நாடுகள் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Tags : countries , The new corona spread to 60 countries
× RELATED 60 வயதை கடந்த 774 பேருக்கு கொரோனா தடுப்பூசி