×

அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும்: மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி

புதுடெல்லி: ‘அரசியல் சாசனத்தின்படி ஆதார் அட்டை செல்லத்தக்க ஒன்றுதான்,’ என மீண்டு திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், அது தொடர்பான மறுஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மத்திய, மாநில அரசின் சலுகைகளை பெறுவதற்கு தொடர்ந்து ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட 27 வழக்குகளையும் விசாரித்த அரசியல் சாசன அமர்வு, கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கி மே வரையில் நான்கு மாதங்களாக மொத்தம் 38 நாட்கள் விசாரித்தனர். இதில், உச்ச நீதிமன்றத்தில் அதிக நாட்கள் விசாரிக்கப்பட்ட 2வது வழக்காக ஆதார் வழக்காக இருந்தது.

அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்றம், கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி தீர்ப்பை வழங்கியது. அதில், ‘அரசு திட்டங்களின் சலுகைகளுக்கு கண்டிப்பாக ஆதார் கட்டாயம். அரசியலமைப்பு சட்டத்தின்படி வாழ்வாதாரத்திற்கு ஆதார் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. மேலும், பள்ளிகள், வங்கிகள் செல்போன் சிம் கார்டு, நீட் தேர்வு, சிபிஎஸ்இ, யுஜிசி பான் கார்டு, பாஸ்போர்ட், குடும்ப அட்டை, வருமான வரி ஆகிய அரசு திட்டங்களுக்கு ஆதார் அட்டையை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். அரசியல் சாசனப்படி இந்த ஆதார் செல்லும்,’ என தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து, இந்த உத்தரவிற்கு எதிராகவும், தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரியும் பல்வேறு தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கன்வீல்கர்,டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷன், அப்துல் நசீர் மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து அவர்கள் பிறப்பித்த உ.த்தரவில், “ வழக்கை பல்வேறு கட்டங்களாக தீர விசாரித்த பின்னர் தான் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த 2018ம் ஆண்டு  இந்த விவகாரத்தில் தீர்ப்பு வழங்கியது.

அதனால், முந்தைய உத்தரவில் எந்தவித மறுஆய்வும் செய்ய வேண்டிய அவசியமில்லை,’ என தெரிவித்துள்ள நீதிபதிகள், அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என மீண்டும் திட்டவட்டமாக உத்தரவிட்டு, அனைத்து மறுஆய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து நேற்று உத்தரவிட்டனர். அரசு திட்டங்களின் சலுகைகளுக்கு கண்டிப்பாக ஆதார் கட்டாயம். அரசியலமைப்பு சட்டத்தின்படி வாழ்வாதாரத்திற்கு ஆதார் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.


Tags : Aadhar goes as per Constitution: Dismissal of review petitions
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்