விளை நிலங்களில் மின் கோபுரம் அமைப்பு நிலத்திற்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சேந்தமங்கலம்: எருமப்பட்டி அருகே, விளை நிலங்களில் மின் கோபுரம் அமைத்ததில், உரிய இழப்பீடு கேட்டு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி  ஒன்றியம் வரகூர் ஊராட்சி மூலக்காட்டில் உள்ள விவசாய நிலங்களில்  உயர் அழுத்த மின் கோபுரம் அமைத்து மின்சாரம்  எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. இதற்கு அரசு நிர்ணயித்த இழப்பீடு  வழங்கவில்லை என உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு  இயக்கம் சார்பில், கோபுரங்கள் அமைக்கப்பட்ட வயல் வெளிகளில் 6 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க   ஒன்றியகுழு உறுப்பினர் கருப்பண்ணன் தலைமை தாங்கினார். கூட்டு இயக்கத்தின்  ஒருங்கிணைப்பாளர் பெருமாள், விவசாய சங்க மாவட்ட பொருளாளர் செல்வராஜ்   ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில், ஏராளமான விவசாயிகள்  கலந்து கொண்டு விவசாய நிலத்திற்கு தற்போது உள்ள விலை வழங்க  வேண்டும். மரம், பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். கூட்டு,  கருணைத் தொகையை 100 சதவீதம் உயர்த்தி தரவேண்டும் என  வலியுறுத்தப்பட்டது.

Related Stories:

>