என்னா பேச்சு பேசினீங்கடா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று பார்டர் - கவாஸ்கர் டிராபியை தக்கவைத்துக் கொண்டதுடன், கிரிக்கெட் பிரபலங்கள் தொடரின் முடிவு குறித்து வெளியிட்டிருந்த கருத்துக் கணிப்புகளை தவிடுபொடியாக்கி உள்ளது. அதிலும், ஆஸி. அணியின் அசைக்க முடியாத கோட்டையாக விளங்கிய பிரிஸ்பேன் மைதானத்திலேயே வெற்றிக் கொடி நாட்டி அனைவரையும் வாய் பிளக்க வைத்துவிட்டது.

இதைத் தொடர்ந்து, டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக இந்தியா மோசமாக தோற்கும் என்று கணித்தவர்களை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வகை வகையான மீம்ஸ்கள் வெளியிட்டு கலாய்த்து வருகிறார்கள். குறிப்பாக, ஆஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்யும் என்று கணித்திருந்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹனை செம்மையாக ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர் மட்டுமல்ல... ரிக்கி பான்டிங், மைக்கேல் கிளாக், பிராட் ஹாடின் உட்பட மேலும் பல முன்னாள் நட்சத்திரங்களும் இப்படி உளறிக்கொட்டி மீம்ஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர்.

Related Stories:

>