மாநில அரசு ஜலஜீவன் திட்டத்தில் ஒரு லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு: பஞ்சாயத்துராஜ் துறை தலைமை அதிகாரி தகவல்

சாம்ராஜ்நகர்: மத்திய-மாநில அரசின் ஜல ஜீவன் திட்டத்தின் கீழ் 1 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு அமைக்கப்படும் என்று மாவட்ட பஞ்சாயத்துராஜ் துறை தலைமை அதிகாரி அசல்போயர் தெரிவித்தார். இதுகுறித்து  அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``மத்திய-மாநில அரசுகள் இணைந்து ஜல ஜீவன் திட்டத்தின் மூலம் அனைவருக்கும் குடிநீர் வசதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்காக பகுகிராம குடிநீர் திட்டத்தின் கீழ் கபினியிலிருந்து நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் நிரப்பி அதை பொதுமக்களின் வீடுகளுக்கு குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.  

இதன் மூலம் சாம்ராஜ்நகர் தாலுகாவில் உள்ள 242 கிராமங்களும், குண்டல்பேட்டையில் உள்ள 174 கிராமங்களும், கொள்ளேகாலில் உள்ள 8 கிராமங்கள் என 424 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1.46 ஆயிரம் குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 46 ஆயிரம் குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 1 லட்சம் குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் பொருத்தும் பணி தொடங்கப்பட உள்ளது’’ என்றார்.

Related Stories: