கவுன்சில் கூட்டத்தில் எந்த தீர்மானமும் எடுக்க படாத நிலையில் இ.ஆக்சன் விட தீர்மானம் நிறைவேற்றியதாக கலெக்டருக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்: கே.சி.முரளி குற்றச்சாட்டு

தங்கவயல்: கவுன்சில் கூட்டத்தில் எந்த தீர்மானமும் எடுக்க பட வில்லை. ஆனால் இ.ஆக்சன் விட தீர்மானம் நிறைவேற்றியதாக கலெக்டருக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர் என்று முன்னாள் நகரசபை தலைவர் கே.சி.முரளி பேசினார்.

தங்கவயல் ராபர்ட்சன் பேட்டையில் உள்ள எம்.ஜி.மார்க்கெட் கடை வியாபாரிகள், நகர சபை கடைகளை இ.ஆக்சன் பொது ஏலத்தில் விட கூடாது. இது வரை கடைகளை நடத்தி வரும் வியாபாரிகளுக்கே ஒப்பந்த அடிப்படையில் கடைகளை வழங்க வேண்டும் என்று கோரி மூன்றாவது நாளாக கடைகளை அடைத்து தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தினமும் அரசியல் கட்சி தலைவர்கள் எம்.ஜி.மார்க்கெட் தர்ணா பந்தலுக்கு வந்து வியாபாரிகளுக்கு ஆதரவு தெரிவித்து கருத்துக்களை கூறி செல்கின்றனர். கடையடைப்பின் மூன்றாவது நாளான நேற்று முன்னாள் நகர சபை தலைவரான கே.சி.முரளி வியாபாரிகள் மத்தியில் பேசும் போது, “எம்.ஜி.மார்க்கெட் சார்ந்து பிழைப்பவர்கள, சுமார் பத்தாயிரம் பேர் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களை காக்க வேண்டிய பொறுப்பு நகர சபைக்கு உள்ளது.

ஆனால் இங்கு வந்து பேசிய நகர சபை தலைவர் “அரசு உத்தரவை எங்களால் மீற முடியாது’ என்று வியாபாரிகளிடமே கூறி சென்றுள்ளார்.

நகர சபையில் சிறப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டி, ஆயிரக்கணக்கான வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டிய நகர சபை தலைவர் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார். இங்கு வந்து பேசும் தலைவர்கள் ஆளுக்கு ஒரு கருத்தை கூறி செல்கின்றனர். வியாபாரிகளை குறை கூறி பேசினாலும், அதற்கும் வியாபாரிகள் கைதட்டுகிறார்கள். மூன்று நாட்களாக கடை அடைத்து போராடி வரும் வியாபாரிகளை தொகுதி எம்எல்ஏ வந்து சந்திக்கவே இல்லை.

கடந்த 2ம் தேதி நடந்த கவுன்சில் கூட்டத்தில் எந்த தீர்மானமும் எடுக்க பட வில்லை. ஆனால் இ.ஆக்சன் விட தீர்மானம் நிறைவேற்றியதாக கலெக்டருக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். அதை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவு படி எம்.ஜி.மார்க்கெட் கடைகள் இ.ஆக்சனில் பொது ஏலம் விடப்படும் என்று வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர். வியாபாரிகள் ஒற்றுமையாக இருந்து போராடுங்கள். போராடி தான் வேற்றி பெற முடியும்” என்றார். வியாபாரிகளை குறை கூறி பேசினாலும், அதற்கும் வியாபாரிகள் கைதட்டுகிறார்கள். வியாபாரிகளை தொகுதி எம்எல்ஏ வந்து சந்திக்கவே இல்லை.

Related Stories: