கிளியாற்றில் மூழ்கி வாலிபர் பலி

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர்  வெங்கடேசன் (35). தனியார் கம்ெபனி ஊழியர். இவரது ெபற்றோர், அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு மதிய உணவை எடுத்து கொண்டு வெங்கடேசன், வயல்வெளிக்கு புறப்பட்டார். அப்போது, கிளியாற்றை கடந்து மறுபக்கம் சென்றபோது, எதிர்பாராதவிதமாக, அவர் நிலைதடுமாறி தண்ணீரில் விழுந்து மூழ்கினார்.தகவலறிந்து  மதுராந்தகம் போலீசார் அங்கு சென்று, தண்ணீரில் மூழ்கிய வெங்கடேசனை சடலமாக மீட்டனர்.

Related Stories:

>