திரை மறைவில் டாஸ்மாக் பார் உரிமையாளர் ரவுடிகள் ராஜ்ஜியமாக மாறிய காஞ்சிபுரம்: வைரல் ஆடியோவில் அதிர்ச்சி தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் சூப்பர்வைசர் மீது தாக்குதல் நடத்த கூலிப்படையினருக்கு உத்தரவிடும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் சித்ரகுப்தர் கோயில் அருகில் ராஜேந்திரன் என்பவர் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். இவர் மற்றொரு டாஸ்மாக் சூபர்வைசர் மீது தாக்குதல் நடத்தி, 307 செய்ய சொல்லும் ஆடியோ காஞ்சியில் வைரலாக பரவி வருகிறது. அந்த ஆடியோவில், ராஜேந்திரன் கூலிப்படைத் தலைவனிடம் பேசியது.

ராஜேந்திரன்: நான் ஒரு அசைன்மெண்ட் தரேன் செய்றீயா… காஞ்சிபுரம் அவுட்டர் பகுதியில் இருந்துவரும் சூபர்வைசரை 307 பண்ணனும். ரூ.50 ஆயிரம் தருவாங்க. (அந்த நபர் சார்ந்த சமூகத்தை குறிப்பிட்டு) அவன், பெட்டிஷன் கை, அடிச்சி காலை ஒடைச்சி விட்டுடு. சும்மா ஜபர்தஸ்சு பண்ணிகிட்டு, கூட வேலை செய்றவங்களை போட்டு கொடுக்கற ஆளு. ஏன்கிட்ட சொன்னாங்க. என் பசங்க இருக்காங்கனு சொன்னேன். அடுத்த வாரம் அவங்க பேசுவாங்க. ஆளைக் காட்டுவாங்க. அடிச்சு விட்டு கூலிப்படைத் தலைவன்: சிட்டினா கொஞ்சம் பயம் அவுட்டானா பிரச்னை இல்லை.

பாத்துக்கலாம். நம்ம பசங்க எல்லாம் தம் அடிக்கிற பசங்க தான். அதனால பாத்துக்கலாம். எப்ப செய்யனும். பணம் எப்படி வாங்கறது. அதெல்லாம் பாக்கணும் இல்ல. வேலை முடிஞ்ச பிறகு 10 கொடுக்கறேன், 20 கொடுக்கறேன்னு சொல்லப் போறானுங்க. ராஜேந்திரன்: கையில துட்ட வாங்கிட்டு சொல்றேன். இப்படி இந்த உரையாடல் வாட்ஸ் ஆப்பில் காஞ்சி பகுதியில் வைரலாக பரவி வருகிறது. பார் ராஜேந்திரன், இதுபோன்று திரைமறைவில் இருந்து பல வேலைகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இதுபோன்ற சம்பவம் நடப்பதற்கு முன்பாகவே, அப்பகுதி போலீசாரை பார் ராஜேந்திரன் கரன்சி கொடுத்து கரெக்ட் செய்து விடுவார் என்றும் கூறப்படுகிறது.

Related Stories: