மெக்கானிக் கடையில் பணம் திருடிய காதலர்கள் கைது

ஆவடி: ஆவடி அருகே அயப்பாக்கம் தெரசா தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (42). இவர் அம்பத்தூர்- அயப்பாக்கம் மெயின்ரோட்டில் பைக் பஞ்சர் கடை மற்றும் மெக்கானிக் செட் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது  மொபட்டில் ஒரு வாலிபரும் இளம்பெண்ணும் வந்தனர். அவர்கள் கனகராஜிடம், ‘‘மொபட் ஸ்டாண்ட் உடைந்துவிட்டது. சரிப்படுத்தி தாருங்கள்’’ என்று கேட்டுள்ளனர்.

இதையடுத்து, கனகராஜ் வந்து அவர்களது மொபட்டின் ஸ்டாண்டை சரிபடுத்தி கொண்டிருந்தார்.

அப்போது அவருடன் வந்திருந்த இளம்பெண், கடைக்குள் புகுந்து கல்லாப்பெட்டியில் வைத்திருந்த பணத்தை எடுத்து தனது ஜாக்கெட்டுக்குள் வைத்தபோது பார்த்து அதிர்ச்சியடைந்த கனகராஜ் கூச்சலிட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பெண்ணையும் வாலிபரையும் பிடித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.  விசாரணையில், சென்னை ஐசிஎப் தெற்கு காலனியை சேர்ந்த சரண் (25), திருமங்கலம் மத்திய வருவாய் குடியிருப்பை சேர்ந்த சீனாதாஜின் (20) என்று தெரியவந்தது.  இருவரும் காதலர்கள் என கூறப்படுகிறது, அந்த பெண்ணிடம் இருந்து ரூ.600 பறிமுதல் செய்தனர்.  பின்னர் புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பெரியதுரை தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து  காதலர்கள் கைது செய்து வேறு ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார்களா என விசாரிக்கின்றனர். 

Related Stories:

>