×

தமிழகத்தில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்துவதற்கான முதல் ஆலோசனை கூட்டம்

சென்னை: தமிழகத்தில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்துவதற்கான முதல் ஆலோசனை கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையேற்று, தமிழக அரசின் பல்வேறு நலத்திட்ட பயன்கள் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, தமிழகத்தில் உள்ள முழுமையான புள்ளி விவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை முடிவு செய்து, அந்த புள்ளி விவரங்களை திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைத்து தமிழக அரசு கடந்த மாதம் உத்தரவிட்டது.

தமிழ்நாட்டில் சாதிவாரியான அளவிடக்கூடிய முழுமையான புள்ளி விவரங்களை சேகரிக்கும் ஆணையத்தின் அலுவல் சார்ந்த உறுப்பினர்களின் முதல் கூட்டம் நேற்று சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆய்வு கூட்ட அரங்கில் நடந்தது.   கூட்டத்தில், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சந்திரமோகன், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர்  அதுல் ஆனந்த், தமிழ்நாடு மின் ஆளுகை முகமை ஆணையர் சந்தோஷ் மிஸ்ரா, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் காமராஜ், ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் முனியநாதன், ஆணையத்தின் உறுப்பினர்-செயலர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் மதிவாணன், சென்னை பெருநகர மாநகராட்சி  பழங்குடியினர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, நகராட்சி நிர்வாகம், நகர பஞ்சாயத்து, சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.Tags : meeting ,Tamil Nadu , First consultative meeting to conduct caste wise survey in Tamil Nadu
× RELATED வரும் 5-ம் தேதி வரை தமிழ்நாடு,...