×

படிப்படியாக அனைவருக்கும் தடுப்பூசி: சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

சென்னை: சென்னை குரோம்பேட்டையில் உள்ள டாக்டர் ரேலா மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்ச்சியை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று மதியம் ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனையின் தலைவர் டாக்டர் முகமது ரேலா, செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பிரியா ராஜ் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் டாக்டர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், “தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முன்கள‌ பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. அடுத்தபடியாக பல்வேறு பாதிப்புக்கு உள்ளானவர்கள், 50 வயதுக்கு அதிகமானவர்கள், இறுதியாக பொதுமக்கள் என படிப்படியாக அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். சென்னையில் 3வது மருத்துவமனையாக உலகப் புகழ்பெற்ற டாக்டர் ரேலா  மருத்துவமனை பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது” என்றார்.

Tags : Secretary of Health , Vaccination for all gradually: Interview with the Secretary of Health
× RELATED கொரோனா தடுப்பூசி முகாம் துவக்கம்