பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கான ஜிபிஎப் எங்கே?

சென்னை: தமிழக பொதுப்பணித்துறை யில் ஜிபிஎப் பணம் கடந்த 2019 இறுதி மற்றும் 2020ல் ஓய்வு பெற்ற ஊழியர்கள், பொறியாளர்கள் ஜிபிஎப் பணம் 6 மாதம் முதல் 1 ஆண்டு வரை கிடைக்க பெறாத நிலை தான் உள்ளது. இது தொடர்பாக நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜிபிஎப் பெற விண்ணப்பித்து 6 மாதங்கள் அல்லது ஒரு வருடங்கள் வரை பணம் கிடைப்பதில்லை என்ற தகவல் கிடைக்க பெற்றுள்ளது.  இனி வருங்காலங்களில் துறையின் அதிகாரிகள், ஜிபிஎப் பெற ஊழியர்கள் விண்ணப்பிக்கும் போது, அவர்கள் தொடர்பான விவரங்களை தயாரித்து அக்கவுண்ட் ஜெனரல் அலுவலகத்துக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். இதில், எந்தவித தாமதமும் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>