தமிழகம் முழுவதும் சிறைகளில் 40 செல்போன் பறிமுதல்

வேலூர்: தமிழகத்தில் சென்னை புழல் 1, புழல் 2, வேலூர், கோவை, கடலூர், பாளையங்கோட்டை, மதுரை, சேலம், திருச்சி, புதுகோட்டை என மத்திய சிறைகளும், திருச்சி, வேலூர், புழல் 3 பெண்கள் தனிச்சிறை மற்றும் கிளைச்சிறைகள் என மொத்தம் 138 சிறைகள் உள்ளன. சிறைகளில் தடை செய்யப்பட்ட பொருட்களான கஞ்சா, செல்போன் உள்ளிட்டவை தடையின்றி கிடைக்கிறது. செல்போன் மூலம் சிறையில் உள்ள கைதிகள், அடியாட்களை கொண்டு கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களுக்கு திட்டம் வகுத்து கொடுத்து வந்துள்ளனர் என புகார்கள் எழுந்தது.

இந்நிலையில், செல்போன் நடமாட்டத்தை தடுக்கும் வகையில், சிறைகளில் ஜாமர் கருவி கடந்த 2018ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. ஆனாலும் சிறைகளில் செல்போன் நடமாட்டம் குறையவில்லை. தமிழக சிறைகளில் கடந்தாண்டு 40 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழக சிறைகளில் ஜாமர் பயன்பாட்டிற்கு பிறகு செல்போன் நடமாட்டம் குறைந்துள்ளது. கடந்தாண்டு மட்டும் தமிழக சிறையில் 40 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சிறைக்குள் செல்போன் நடமாட்டத்தை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.

Related Stories:

>