ஆஸ்பத்திரிக்கு சென்ற போது 108 ஆம்புலன்சில் ‘குவா குவா’

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா மகிளிப்பட்டியை சேர்ந்த சரண்யா (21) என்பவருக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. கள்ளப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்ட அவர்,  உறவினர்கள் சிலருடன் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பிவைக்கப்பட்டார்.  கரூர் - திருச்சி பைபாஸ் சாலை வீரராக்கியம் பிரிவு அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது, சரண்யாவுக்கு வலி அதிகமாகி, ஆம்புலன்சிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதனைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்து விட்டு திரும்பினர். ஆம்புலன்ஸ் பணியாளர்கள் அனைவருக்கும் சரண்யாவின் உறவினர்கள் நன்றியை தெரிவித்தனர்.

Related Stories:

>