‘திருமண மண்டபம் காணவில்லை’ என போலீசில் புகார்

தண்டையார்பேட்டை: சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆர்டிஐ செல்வம். இவர் நேற்றிரவு ஆர்.கே.நகர் போலீசில் அளித்த புகாரில், கொருக்குப்பேட்டை, ஜீவா நகர் 2-வது சந்தில் கடந்த 1992-ம் ஆண்டு குடிசை மாற்று வாரியம் சார்பில் இடம் ஒதுக்கப்பட்டு, ஜீவா நகர், மீனாம்பாள் நகர், பாரதி நகர் மக்களின் பயன்பாட்டுக்காக ஒரு திருமண மண்டபம் கட்டப்பட்டது.  தற்போது அந்த மண்டபம் இருந்த அடையாளமே தெரியாமல் காணாமல் போய்விட்டது. இந்த மண்டபத்தை கண்டுபிடித்து, மக்களின் பயன்பாட்டுக்கு மீண்டும் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துகிறேன் என கூறியிருந்தார்.

Related Stories:

>