திருக்கோவிலூரில் பரபரப்பு அரசு பள்ளியில் மாணவர்களை அனுமதிக்க திடீர் மறுப்பு

திருக்கோவிலூர் : திருக்கோவிலூரில் அடையாள அட்டை அணிந்து வராத மாணவர்களை பள்ளியில் சேர்க்காததால் நீண்ட நேரம் காத்திருந்தனர்.தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

இதனையொட்டி மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர்  தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு உரிய ஆலோசனைகள், அறிவுரைகள் வழங்கப்பட்டு, பள்ளி திறப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. வகுப்பறைகளின் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் நேற்று 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம்போல் பள்ளி திறக்கப்பட்டன. கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக மாணவ, மாணவியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வைட்டமின் மாத்திரைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

திருக்கோவிலூர் வடக்கு தெருவில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு நேற்று மாணவர்கள் வந்தனர்.

அப்போது சில மாணவர்கள் அடையாள அட்டை, மாஸ்க் அணிந்து வரவில்ைல. மேலும் தலை முடியும் அதிகமாக இருந்தது. இதனால் அந்த மாணவர்களைபள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக பள்ளி வளாகம் முன் மாணவர்கள் நீண்டநேரம் காத்திருந்தனர். பின்னர் மாணவர்களை எச்சரித்து பள்ளிக்குள் அனுமதி அளித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: