வரும் காலங்களில் இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு மேலும் வலுவாகும்!: அமெரிக்க வெளியுறவு அமைச்சராக உள்ள பிளிங்கன் நம்பிக்கை..!!

வாஷிங்டன்: வரும் காலங்களில் இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு மேலும் வலுவாகும் என அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்கவுள்ள ஆண்டனி பிளிங்கன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் பதவியேற்கவுள்ள நிலையில் அவரது அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக ஆண்டனி பிளிங்கன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் தனது பதவியேற்புக்கு முன்பாகவே இந்தியா உடனான உறவு குறித்து அவர் மனம் திறந்துள்ளார். கிளிண்டன் அதிபராக இருந்த காலகட்டத்திற்கு பின்னர் இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு வலுவாகவே இருந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், ஒபாமா ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்தில் இருநாட்டு உறவு மிகவும் ஆழமாக இருந்தது என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, டிரம்ப் ஆட்சிக்காலத்தில் இருநாட்டு ஆட்சி உறவு முன்னோக்கி எடுத்து செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளன ஆண்டனி பிளிங்கன், வரும் காலங்களில் இருநாட்டு உறவும் மேலும் வலுவாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக தீவிரவாதம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இரண்டு நாடுகளும் இணைந்து செயல்பட உள்ளதாகவும், இந்திய பிரதமர் மோடி, மாற்று எரிசக்தி மற்றும் மாறுபட்ட தொழில்நுட்பங்களை கையாளுவதில் மிக சிறந்த வழிகாட்டி என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக இன்று ஜோ பைடன் பதவி ஏற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: