×

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 218 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட போதும் கொரோனா வைரஸ் உருமாறி வேகமாக பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, 96,574,553 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 25,282,310 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 111,845 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனாவில் இருந்து 69,229,430 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2,063,504 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - 24,806,964
இந்தியா - 10,596,228
பிரேசில் - 8,575,742
ரஷியா - 3,612,800
இங்கிலாந்து - 3,466,849

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 411,486
பிரேசில் - 211,511
இந்தியா - 152,747
மெக்சிகோ - 141,248
இங்கிலாந்து - 91,470
இத்தாலி - 83,157
பிரான்ஸ் - 71,342
ரஷியா - 66,623


Tags : Corona , World, Corona
× RELATED தொடர்ந்து மிரட்டும் கொரோனா வைரஸ்...! உலக...