×

தமிழக அரசு அலுவலகங்களில் ஜனாதிபதி, பிரதமர் படங்களை வைக்க கோரி வழக்கு: அறிக்கை தர அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழக அரசு அலுவலகங்களில், மகாத்மா காந்தி, நேரு, திருவள்ளுவர், அண்ணா, ராஜாஜி, பெரியார் படங்களுடன், குடியரசு தலைவர் மற்றும் பிரதமரின் படங்களை வைக்க கூறி, 1978ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அரசு அரசாணை பிறப்பித்தும், பெரும்பாலான அரசு அலுவலகங்களில், குடியரசு தலைவர், பிரதமர் படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு அலுவலகங்களில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் படங்களை வைக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சத்திகுமார் சுகுமார குரூப் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வக்கீலின் வாதத்தை ஏற்று வழக்கை  ஜனவரி 25ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர் படங்கள் வைக்க வகை செய்துள்ள அரசாணையின்படி எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர்.

Tags : President ,offices ,Government ,Government of Tamil Nadu ,iCourt , Government of Tamil Nadu, Case, Report, HC, Order
× RELATED திட்டங்களை சொதப்பி விட்டு சமூக...