ஓபிஎஸ் சகோதரர் மீதான புகார் வாபஸ்

காரைக்குடி: காரைக்குடியை சேர்ந்தவர் பழனி (41). இவர் காரைக்குடி டிஎஸ்பி அருணிடம் சில தினங்கள் முன் அளித்த புகாரில், துணைமுதல்வர் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா, அவரது மகன் நடத்தி வரும் பள்ளிக்கு, சோபா செட்களை சப்ளை செய்ததில் ரூ.2.10 லட்சத்தை தராமல் இழுத்தடித்தனர்.

இதுதொடர்பாக கேட்டபோது, தன்னை கடத்தி ரூ.1 கோடி மிரட்டியதாகவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அதிமுக நிர்வாகி ஒருவர் வீட்டில்  நேற்று சமரச  பேச்சு நடந்ததாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து பழனி கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.

Related Stories:

>